சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று(மார்ச் 24) சந்தித்துப் பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதி எண்ணிக்கைகள் குறித்து, நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடனான சந்திப்பில் முடிவு செய்யப்பட்டதாக ஜி.கே. வாசன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை பசுமைவழிச் சாலையில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஜி.கே. வாசன் சென்றார்.
தொகுதிப் பங்கீடு குறித்து இபிஎஸ் - ஜி.கே. வாசன் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தாகத் தெரிகிறது.
சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய ஜி.கே.வாசன்,
"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்யப்பட்டு விட்டது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.
சின்னம் தொடர்பான மனு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.
தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று (மார்ச் 23) சென்னை வந்தார். தொகுதி உடன்பாட்டில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
ADMK- Tamil maanila congress seat sharing: GK Vasan meets edappadi palanisamy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்

தவெகவுக்கு அதிமுக ஆதரவா? இபிஎஸ்ஸுடன் ஆனந்த் சந்திப்பு!

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!
தமாக வேட்பாளர்கள் யார்யார்? ஜி.கே. வாசன் அறிவிப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


