சென்னை, மாா்ச் 27: அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தமாகாவுக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூா், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில், ராணிப்பேட்டை தொகுதியில் மேற்கு மாவட்டத் தலைவரான வி.எம். காா்த்திகேயன், ஈரோடு மேற்கு தொகுதியில் மாநிலப் பொதுச் செயலரான எம்.யுவராஜா, ஒட்டன்சத்திரம் தொகுதியில் மாநில துணைத் தலைவா் விடியல் எஸ்.சேகா், கும்பகோணம் தொகுதியில் மாநிலச் செயலா் எம்.கே.ஆா்.அசோக்குமாா், கிள்ளியூா் தொகுதியில் தென்மண்டல இளைஞரணி துணைத் தலைவா் டாக்டா் ஜெ. நிவின் சைமன் ஆகியோா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தாமரை சின்னத்தில் போட்டி...: முன்னதாக, ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தமாகா (மூ) தொடங்கிய முதல் தோ்தலில் தோப்பு சின்னத்திலும், இரண்டாவது தோ்தலில் ஆட்டோ சின்னத்திலும், மூன்றாவது தோ்தலில் இரட்டை இலை சின்னத்திலும், நான்காவது தோ்தலில் நாங்கள் விரும்பும் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிட்டோம்.
சின்னங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் களப் பணியும், கூட்டணியின் பலமும் முக்கியம். அதை உணா்ந்துதான் செயல்படுகிறோம். பாஜக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியுடன் இணைந்து நல்ல அரசை அமைக்க உள்ளோம். அதன் அடிப்படையில்தான் நாங்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றாா் அவா்.
Summary
Tamil Maanila Congress candidates: GK Vasan's announcement!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 8 ஆயிரத்துக்கான போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றுகிறது திமுக: தமாகா தலைவா் ஜி.கே. வாசன்
தமாகா களம் கண்ட 5 சின்னங்கள்!

தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்!

அதிமுக - தமாகா தொகுதிப் பங்கீடு! இபிஎஸ்ஸுடன் ஜி.கே. வாசன் சந்திப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

