திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 3 சுற்றுப் பேச்சுவார்த்தை மற்றும் 2 முறை முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு சிபிஎம் தரப்பில் 5 தொகுதிகள் ஏற்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு போட்டியிட்ட 6 இடங்களை ஒதுக்குமாறு சிபிஎம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இறுதியில் 5 இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பில், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், கனகராஜ் உள்ளிட்டோர் கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பெ. சண்முகம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது,
''தொகுதி குறைப்பை மார்க்சிஸ்ட் மாநிலக் குழு ஏற்றுக்கொள்ளாததால், முதல்வரை சந்தித்தோம். கூட்டணியில் புதிய கட்சி இணைந்துள்ளதால் கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகள் வழங்க முடியவில்லை எனக் கூறினர்.
கடந்த தேர்தலை விட கூடுதலான தொகுதிகள் போட்டியிட வேண்டும் என நினைத்தோம். திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் திருப்தி இல்லை, எனினும் அரசியல் சூழல் காரணமாக ஏற்றுக்கொள்கிறோம்.
சிபிஎம் எடுக்கும் எந்தவொரு முடிவும் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக 5 இடங்களை ஏற்றுக்கொண்டோம்'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Communist Party of India-Marxist has been allotted 5 seats in the DMK alliance
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தமிழ்நாட்டை அடமானம் வைக்கும் இபிஎஸ்! மார்க்சிஸ்ட் செயலர் பெ. சண்முகம்

மாநில உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கிறது: பெ. சண்முகம்

மார்க்சிஸ்டுக்கு திருவொற்றியூர் தொகுதி! அதிருப்தியில் திமுகவினர்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


