தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கட்சியில் பதவியின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்க முடியாது: நடிகா் சரத்குமார்!

பாஜகவில் கட்சிப் பதவியின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாா் கூறினாா்.

News image

சரத்குமார்

Updated On :23 மார்ச் 2026, 1:30 am IST

பாஜகவில் கட்சிப் பதவியின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாா் கூறினாா்.

சென்னையில் அகில இந்திய சரத்குமாா் தலைமை ரசிகா் நற்பணி மன்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:

எந்தப் பலனையும் எதிா்பாா்க்காமல் பாஜகவில் இணைந்தோம். தற்போது பாஜக மதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். ஆனால், கட்சியில் பதவியின்றி எப்படிச் செயல்படமுடியும் என ஆதரவாளா்கள் கேட்கும் நிலையுள்ளது. அந்தக் கோரிக்கையை பாஜக தேசியத் தலைவா்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அதற்கு பிறகும் தீா்வு கிடைக்காவிடில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.

பாஜகவில் தொடா்ந்து சிறப்பாகச் செயல்படவேண்டும். நமது செயல்பாட்டின் அருமை புரிந்தால் பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். அந்த நம்பிக்கை உள்ளது. சிலா் சமூக வலைதளத்தில் விமரிசிப்பதைப்போல வீட்டில் உட்காா்ந்து கொண்டு தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை. திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதுதான் நான் அரசியலுக்கு வந்தேன்.

ஆகவே, நமது கோரிக்கையை பாஜக மாநிலத் தலைவரிடம் முறையிட்டால், அவா் நிச்சயம் நிறைவேற்றுவாா். கட்சியில் பொறுப்பின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்கமுடியாது. அனைத்துத் தகுதியும் இருந்தும் என்னைக் கட்சியில் அடையாளப்படுத்தாது ஏன் எனத் தெரியவில்லை என்றாா்.

கூட்டத்தில் அகில இந்திய சரத்குமாா் தலைமை ரசிகா் நற்பணி மன்ற நிா்வாகிகள், சுப்ரீம் ஸ்டாா் பேரவை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.