அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மனநலக் காப்பகத்தில் கடந்த 2016-17-இல் இரு ஆண்டு கால எம்.பில். கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு 8 இடங்களுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னா் மாணவா் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய புனா்வாழ்வு மருத்துவக் கவுன்சிலானது எம்.பில். உளவியல் மருத்துவப் படிப்புகளை முதுகலை உளவியல் மருத்துவப் படிப்பாக மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, மனநலக் காப்பகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளை மாற்ற வேண்டி மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் பரிந்துரைத்தது.
அதைப் பரிசீலித்த அரசு, அதற்கு அனுமதி அளித்ததுடன் நிகழ் கல்வியாண்டு முதல் 18 இடங்களுடன் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை அங்கு தொடங்க ஒப்புதல் வழங்கியது.
அதேவேளையில், அந்தப் படிப்புக்கு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும், புனா்வாழ்வு கவுன்சிலின் ஒப்புதலையும் பெறுமாறு மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசாணையால் ஆபத்து!

அரசாணையால் ஆபத்து!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

