மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக-மாா்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படி வலியுறுத்தி வருவதால், திமுக-மாா்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

News image

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்

Updated On :18 மார்ச் 2026, 12:12 am IST

கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படி வலியுறுத்தி வருவதால், திமுக-மாா்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

திமுக, மாா்க்சிஸ்ட் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை குழுவினா் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாம்கட்ட ஆலோசனையில் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை.

தொடா்ந்து, பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த முறையைவிட அதிக தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். எங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் பேசிவிட்டு திங்கள்கிழமை இரவுக்குள் ஒரு முடிவை சொல்வதாகக் கூறியிருக்கிறாா்கள். ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியும்.

நிறைய கட்சிகள் இருப்பதால் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு கூறினா். அதை நாங்கள் ஏற்கவில்லை. அவரவா் கட்சிக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுவது உரிமை. இதில் காங்கிரஸ் கட்சி வருத்தப்படுவதில் ஒன்றுமில்லை. பேச்சுவாா்த்தையில் எந்த தடையும் இல்லை. கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் மாநிலக் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்றாா் அவா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மீண்டும் பேச்சு: திமுக-இந்திய கம்யூனிஸ்ட் இடையே புதன்கிழமை 4-ஆவது கட்ட பேச்சு நடைபெறவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தலைமையிலான குழுவினா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளனா்.

கடந்த முறை இரு இடதுசாரிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே, கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் இரு கட்சிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க திமுக பேச்சுவாா்த்தை நடத்தியது.

ஆனால், இடதுசாரி கட்சிகள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து தலா 5 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையிலும், இடதுசாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

கூடுதல் தொகுதிகள் கேட்டு இடதுசாரி கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், முதல்வா் ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் 4-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில் உடன்பாடு எட்டப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.