விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

7 தெருக்கள், 2 பேரவைத் தொகுதிகள்! கோவையின் விநோத கிராமம்!

கோவை மாவட்டத்தின் பொன்னாண்டம்பாளையம் கிராமம் பற்றி...

News image

பொன்னாண்டம்பாளையம் கிராமம் - EPS

Updated On :17 மார்ச் 2026, 4:57 pm IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னாண்டம்பாளையம் கிராமத்தின் 7 தெருக்கள், நான்கு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் ஒன்றையொன்று சந்திக்கின்றன.

மேலும், இந்த கிராமம் அவிநாசி மற்றும் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் எல்லைகளுடனும், கோவை மற்றும் நீலகிரி மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளுடன் ஒன்றோடொன்று மேற்பொருந்துகின்றன.

பொன்னாண்டம்பாளையத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்த விநோத சூழலால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைத்ததில்லை. மாறாக, அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குக்கூட பல நிர்வாகச் சிக்கல்களை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, தங்கள் கிராமத்தை சூலூர் சட்டப்பேரவைக்கு உள்பட்ட கணியூர் ஊராட்சி எல்லைக்குள் ஒரே உள்ளாட்சி அமைப்பின் கீழ் இணைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தென்னம்பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள பொன்னாண்டம்பாளையத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்களின் வாழ்வாதாரத்துக்கு தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையுமே சார்ந்துள்ளனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு இணையாக புலம்பெயர்த் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் உள்ள ஏழு தெருக்கள் மொப்பிரிபாளையம் பேரூராட்சி மற்றும் கணியூர், அரசூர், நாரணபுரம் ஆகிய கிராமப் பஞ்சாயத்துகள் என நான்கு உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

இவற்றில் 200 வீடுகளில் 650 வாக்காளர்கள் வசிக்கும் பெரும் பகுதி கணியூர் பஞ்சாயத்து எல்லைக்குள்தான் வருகின்றன. சில வீடுகள் அரசூர் பஞ்சாயத்து கீழும், சில வீடுகள் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நாரணபுரம் பஞ்சாயத்துக்கு கீழும் வருகின்றன. 30 வீடுகள் மட்டுமே மொப்பிரிபாளையம் பேரூராட்சியின் கீழ் வருகின்றது.

20 ஆண்டுகளாகப் போராடியும் அடிப்படையான குடிநீர் பிரச்னைக்கே தீர்வு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டும் மக்கள், தங்களின் அனைத்து ஆவணங்களையும் கணியூர் பஞ்சாயத்துக்கு கீழ் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Summary

7 Streets, 2 Assembly Constituencies! Coimbatore's Ponnandampalayam Village

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.