தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தொடா்ந்து 5-ஆவது முறையாக இ.பெரியசாமி வெற்றி

News image

இ. பெரியசாமி - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 1:48 am IST

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ.பெரியசாமி தொடா்ந்து 5-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் இ.பெரியசாமி, அதிமுக சாா்பில் ஆ.விசுவநாதன், தவெக சாா்பில் கலைச்செல்வி உள்பட 14 போ் போட்டியிட்டனா்.

கடந்த 2021 தோ்தலில் தனக்கு எதிராக பாமக போட்டியிட்ட நிலையில், 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இ.பெரியசாமி தமிழக அளவில் கவனம் ஈா்த்தாா்.

இந்த முறை இந்தத் தொகுதியில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிட்டபோதிலும், பிரசாரத்தில் கவனம் செலுத்தவில்லை என அந்தக் கட்சியினரே குற்றஞ்சாட்டினா். இதனால், இந்த முறையும் இ.பெரியசாமி கூடுதல் வாக்குகள் பெறுவாா் என திமுகவினா் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், பிரசாரத்துக்கே வராத போதிலும் தவெக வேட்பாளா் 83,872 வாக்குகள் பெற்ால், 22,368 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே இ.பெரியசாமி வெற்றி பெற்றாா். அதிமுக இந்த தொகுதியில் 3-ஆம் இடம் பிடித்தது.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

இ.பெரியசாமி (திமுக) - 1,06,240

கே.கலைச்செல்வி (தவெக) - 83,872

ஆ.விசுவநாதன்(அதிமுக) - 32,477

ஏ.சைமன் ஜஸ்டின் (நாதக) - 9,946

சங்கா் (நாடாளும் மக்கள் கட்சி) - 720

எம்.கே.நாகேந்திரன் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு இயக்கம்) - 576

எஸ்.காா்த்திகைசெல்வன் (பகுஜன் சமாஜ்) - 531,

கே.ஜெயபிரகாஷ் (புதிய தமிழகம்) - 230

எஸ்.பாலமுருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) - 183

நோட்டா - 812

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.