தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து...

News image

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து... - X

Updated On :16 மார்ச் 2026, 4:45 pm IST

சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதமே நடைபெறவிருந்த நிலையில் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்ததால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்ற புத்தகத்துக்காக எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு பிரபலங்கள் மற்றும் இலக்கியத் துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் 'தோழர்' ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!

தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய அகாதெமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!"என்று பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

ச. தமிழ்ச்செல்வன், விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரர். இவரது முதல் கவிதை 'ஒருநாள் டைரி' 1972-ல் கோவில்பட்டியில் ‘நீலக்குயில்’ என்ற இலக்கிய இதழில் வெளிவந்தது.

தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவர், 1978-ல் திரைச்சுவர்கள்' என்ற சிறுகதையை எழுதி, அது ‘தாமரை’ இதழில் வெளியிடப்பட்டது.

முதல் கதைத் தொகுப்பு 'வெயிலோடு போய்' 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்த கதையை வைத்து இயக்குநர் சசி 'பூ' என்ற திரைப்படத்தை உருவாக்கினார். இத்திரைப்படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருது பெற்றார்.

மேலும் கட்டுரைகள், சிறார் இதழ்கள் எழுதியுள்ள பல நூல்களையும் தொகுத்துள்ளார்.

Summary

MK stalin wishes to writer Tamilselvan for receiving Sahitya Akademi Award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.