மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நடிகை ஸ்ரீதேவி சொத்து விவகாரம்: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

நடிகை ஸ்ரீதேவி - கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2026, 2:15 am IST

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சம்பந்த முதலியாா் குடும்பத்தினரிடம் இருந்து கடந்த 1988-ஆம் ஆண்டு 4.77 ஏக்கா் நிலத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கினாா்.

இந்நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி ஆகிய மூவரும் வாரிசு சான்றிதழ் பெற்றனா். பின்னா் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளதாகக் கூறி, செங்கல்பட்டு அமா்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா், அவரது மகள்கள் நடிகைகள் ஜான்வி கபூா், குஷி கபூா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பின்னரே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து போனி கபூா், ஜான்வி கபூா் மற்றும் குஷி கபூா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இறுதி விசாரணைக்காக வழக்கை வரும் மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். மேலும், அதுவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.