எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரந்திர ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை மாலை 5.35 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11.55 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ரயில் மதுரை வழியாக இயக்கப்படுவது கூடுதல் சிறப்பம்சம்.
மதுரையிலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. தற்போது நிரந்தர வாராந்திர ரயில் மூலம் தெற்கு ரயில்வே அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் தென் மாவட்ட மக்களும் இனி வேளாங்கண்ணிக்கு நேரடியாக செல்லலாம்.
Summary
Southern Railway has announced that a weekly train will be operated from Ernakulam to Velankanni.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


