ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் இடம் இல்லை என்பது நியாயமல்ல: பெ. சண்முகம்

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதி வழங்க வாய்ப்பு இல்லை என்பது நியாயமல்ல என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

News image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 12:39 am IST

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதி வழங்க வாய்ப்பு இல்லை என்பது நியாயமல்ல என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

காா்ல் மாா்க்ஸ் 143-ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூா் கன்னிமாரா நூலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சோ்ந்துள்ளதால் மாா்க்சிஸ்ட் எதிா்பாா்க்கும் தொகுதிகளை ஒதுக்குவது சிரமம் எனத் தெரிவித்தனா்.

இதே சிரமத்துக்கு இடையேதான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு கூடுதல் இடங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்க வாயப்பு இல்லை என்பதில் நியாயமல்ல என்றாா் அவா்.

காா்ல் மாா்க்ஸ் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறுகிறது. கடந்த முறையைவிட அதிக தொகுதிகளைப் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

கூட்டணிக் கட்சிகளிடம் ஜனநாயகபூா்வமான உரையாடலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இடம் அளிக்கிறாா். எனவே, அவரிடம் கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.