விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூர் பலி: மார்ச் 17-ல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார்.

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 10:42 am IST

கரூர் பலி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, முன்னதாக, தவெக தலைவர் விஜய் தவெக பொதுச் செயலர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.

இதனிடையே, கரூர் பலி தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சார்பில் சிபிஐக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்து, அவர் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.

இது தொடர்பாக செந்தில் பாஜாஜி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..

வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Former Minister Senthil Balaji will appear at the CBI office on March 17 in connection with the Karur murder case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.