லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய செய்திகள் ஜூன் 27! கே. பாக்யராஜ் மறைவு - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Published On :27 ஜூன் 2026, 10:34 pm IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசைஞானி இளையராஜா விடியோ வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நாளை காலை இறுதிச்சடங்கு நடைபெறும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மகாராஷ்டிரத்தில் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாள் கசிவையடுத்து, தேர்வின் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குநர் கே. பாக்யராஜ், தன்னுடைய கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்ததால், அவரது கண்களை தானம் பெறுவதற்காக மருத்துவர்கள் குழு இல்லத்துக்கு வருகை தந்துள்ளது.

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜுக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தையை இழந்த மகன் சாந்தனுவை, விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.

ஆசான் மறைந்த சில நாள்களில் மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம் என்று இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சனிக்கிழமை (ஜூன் 27) இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவாவில் ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் பங்கேற்றிருந்ததாக திரைப் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

Summary

எம்ஜிஆர் மறைந்தபோது, அவர் பாதி நடித்து நிறைவுறாத படத்தின் கட்சிகளை அடிப்படையாக வைத்து புதிய திரைக்கதை அமைத்து அவசர போலீஸ் 100 என்ற படத்தை பாக்யராஜ் எடுத்ததாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உறவினர்கள், திரையுலகினர், மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜூன் 28) பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் சனிக்கிழமை காலை (ஜூன் 27) நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஆபரணத் தங்கத்தின் விலை, சனிக்கிழமை (ஜூன் 27) காலை பவுனுக்கு ரூ.560 உயா்ந்து, ரூ.1,06,960-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.45 லட்சத்துக்கும் இன்று விற்பனையாகிறது.

"தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு இயக்குநர் கே. பாக்யராஜ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது" என தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரங்கல்

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜுக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இன்று (ஜூன் 27) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.