தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் அவரது இல்லத்தில் இன்று மாரடைப்பு ஏற்பட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது பாக்யராஜ் மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். செய்தி அறிந்து, இயக்குநர்கள் பாண்டியராஜன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் பாக்யராஜ் வீட்டில் குவிந்து வருகிறார்கள்.
பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா உள்ளனர். நலமுடன் இருந்த பாக்யராஜ் திடீரென மரணமடைந்திருப்பது திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அண்மையில்தான், அவரது குருநாதர் பாரதிராஜா வயது முதிர்வு காரணமான உடல்நலக் குறைவால் காலமான நிலையில், 17 நாள்களில், மற்றொரு சிறந்த இயக்குநரும் மறைந்திருப்பது திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
கடந்த 48 ஆண்டுகளில் 75 படங்களில் நடித்துள்ளார், 25 படங்களை இயக்கியிருக்கிறார். திரைக்கதை மன்னன் பாக்யராஜின் சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பது அனைவரையும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாக்கியிருக்கிறது.
1953ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பிறந்தவர் இயக்குநர் கே. பாக்யராஜ். 1981ஆம் ஆண்டு நடிகை பிரவீணாவைத் திருமணம் செய்து கொண்டார். உடல்நலக் குறைவால் கடந்த 1983ல் அவர் இறந்ததால், திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருந்த நடிகை பூர்ணிமாவை 1984ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் சாந்தனு, மகள் சரண்யா உள்ளனர்.
Summary
Shock in the film industry! Famous director and actor Bhagyaraj has passed away!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 27! கே. பாக்யராஜ் மறைவு - நேரலை
நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல்! அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி
விடியோக்கள்

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினியின் 'தர்மன்' போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


