மறைந்த இயக்குநர், நடிகர் பாக்யராஜின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்த் திரையுலகின் மிக முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் இன்று(ஜூன் 27) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
சென்னையில் அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரையுலகினரும் உறவினர்களும் மக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்தும் நேரடியாகச் சென்று பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, கனிமொழி மற்றும் திரையுலகினர் பலரும் பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நாளை(ஜூன் 28) பகல் 1.30 மணியளவில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாக்யராஜ் மறைவு பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் பாக்யராஜ்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி!

பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் Vijay அஞ்சலி!

கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர்
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


