இந்தியாவிலேயே மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டோடிய ஒரே முதல்வர் ஜோசப் விஜய் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது சரிதானா?
ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தொடக்கிவைத்தார். மேலும் அமைச்சர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
சென்னை மெரீனா காமராஜர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 6 கிமீ தொலைவு மாரத்தான் போட்டி நடைபெற்ற நிலையில் முதல்வர் விஜய், அவர்களுடன் சுமார் 3 கிமீ தொலைவு ஓடினார்.
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில், “ஓடத் தொடங்குங்கள், போதைப்பொருளை நிறுத்துங்கள், விளையாடத் தொடங்குங்கள் போதைப்பொருளை விடுங்கள்” (ஸ்டாப் ரன், ஸ்டாப் டிரக்ஸ், ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு) என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருடனும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியும் முதல்வர் விஜய் எடுத்துக்கொண்டார்.
அதேபோல மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
முதல்வர் விஜய் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "இதுவரைக்கும் இருந்த முதல்வர்களிலேயே மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு 3 கிமீ ஓடிய முதல்வர் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே ஒரே முதல்வர் ஜோசப் விஜய்தான்" என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் ஏற்கெனவே மாரத்தான் ஓடிய முதல்வர்கள் இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லா
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற்ற மாரத்தான் போட்டியைத் தொடக்கிவைத்ததுடன் அதில் கலந்துகொண்டு ஓடினார். அப்போது அவருக்கு வயது 54.
ஒரு கிலோமீட்டருக்கு 5.54 நிமிடம் என்ற வேகத்தில் சுமார் 2 மணி நேரத்தில் 21 கிமீ தொலைவு ஓடினார்.
தான் 13 கிமீ-க்கு அதிகமாக இதுவரை ஓடியதில்லை என்றும் 21 கிமீ ஓடியது இதுதான் முதல்முறை என்றும் கூறினார்.
அதேபோல ஜம்மு - காஷ்மீரில் 2026 மார்ச் மாதம் நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் ஒமர் அப்துல்லா கலந்துகொண்டார். அதேபோல பெங்களூர், மும்பை என பல்வேறு இடங்களில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளிலும் கலந்துகொள்கிறார்.
சமீபத்தில் 2026 ஏப்ரல் மாதம் பெங்களூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் ஒமர் அப்துல்லா கலந்துகொண்டார்.
2025 ஜூலையில் நடைபெற்ற போட்டியில் நயாப் சிங் சைனி..
நயாப் சிங் சைனி
ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனியும் பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.
2024, 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளைத் தொடங்கிவைத்ததுடன் இளைஞர்களுடன் அதில் பங்கேற்கவும் செய்துள்ளார். இளைஞர்களைப் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தி பங்கேற்றார்.
போதைப்பொருள் விழிப்புணர்வு
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் அதனைத் தடுக்க தனது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் முதல்வர் விஜய் கூறி வருகிறார்.
அதிலும் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு போதைப்பொருள் புழக்கம் ஒரு முக்கிய காரணமாகவும் பார்க்கப்டுகிறது.
அந்த வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு நாளில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய மாரத்தான் போட்டியைத் தொடங்கிவைத்து முதல்வர் விஜய்யும் அதில் பங்கேற்றுள்ளார். இது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஒரு நல்ல முயற்சி என்றும் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய், இளைஞர்களுடன் இணைந்து இன்று நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் பாராட்டுக்குரியதாகவும் உள்ளது. தலைவர்கள் மக்களுடன் இணைந்து நடக்கும்போதும், ஓடும்போதும், அவர்களுடன் நிற்கும்போதும் விழிப்புணர்வு ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது. போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது அரசியலைக் கடந்த ஒன்று. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று கூறியுள்ளார்.
Summary
Is Vijay the only Chief Minister in India to have run a marathon?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் - புகைப்படங்கள்

சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்; முதல்வர் விஜய்யின் உறுதிமொழி!

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

