திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு, கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல டெண்டர்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மல்டி லெவல் கார் பார்கிங் போன்ற சில டெண்டர்களை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் இயக்குவதற்காக 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் மின்சார பேருந்துகள் வாங்க கோரப்பட்ட டெண்டரால் நிதி இழப்பு ஏற்படும் என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூன் 18 ஆம் தேதி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜெர்மன் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் 625 மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
The Tamil Nadu government has cancelled the tender for the procurement of 500 electric buses!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மின்சார வாகன கொள்கை 2.0-க்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா தீவிர பரிசீலனை

மின்வெட்டு: மின்சார வாரியத்தை தவெக அரசு சீரமைக்க வேண்டும் செ. ஜோதிமணி

ஈரோடு - செங்கோட்டை ரயில் இன்று ரத்து

இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

