தவெக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 24) சந்தித்தார்.
அதிமுகவில் இருந்து விலகியதும், தவெகவில் விஜயபாஸ்கர் இணையவுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் என். ஆனந்தை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று சந்தித்தார்.
வரும் திங்கள் கிழமை (ஜூன் 29) தவெகவில் விஜயபாஸ்கர் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகும் நிலையில், ஆனந்த் உடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, திமுகவுக்கு அடுத்து 3 வது இடத்தை அதிமுக பிடித்ததால், அக்கட்சியில் பலர் அதிருப்தி அடைந்தனர்.
குறிப்பாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை உருவாக்கினர். தங்கள் ராஜிநாமா கடிதத்தையும் வழங்கினர்.
இதன் பிறகு நடந்த சமாதான பேச்சுக்கு பிறகு எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகத் திரும்பினர். எனினும் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் இபிஎஸ்ஸை சந்திப்பதை தவிர்த்து வந்தனர்.
இதனிடையே தனது எம்.எல்.ஏ. பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது.
முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்திப்பதற்கு விஜயபாஸ்கர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டுவரும் நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள என். ஆனந்த் இல்லத்திற்கு சென்று விஜய்பாஸ்கர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் தவெகவில் விஜயபாஸ்கர் இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.
Summary
Is Vijayabaskar joining TVK Meeting with Minister Anand
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்! சி. விஜயபாஸ்கர்

மக்களுக்காக சேவையாற்றத் தயார்: என். ஆனந்த்

உள்ளாட்சித் தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஆனந்த் பேச்சு!

தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


