செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்! உதயநிதி

தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருப்பது பற்றி...

News image

முதல்வர் ஜோசப் விஜய் | எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - TNDIPR | X

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று பதிலுரை அளித்தார்.

அப்போது, சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு குட்டிக்கதைக் கூறுவதற்கு முதல்வர் அனுமதி கேட்டார். பேரவைத் தலைவர் அனுமதி அளித்த நிலையில், முதல்வர் கதையைக் கூறினார்.

அதில், ”ஒரு ஊருல பெரியவர் ஒருவர் வெய்யில் அதிகமாக இருப்பதாக தெரிவித்துக் கண்ணில் கைவைத்துத் தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், “உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.... அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்” என்று கூறி முடித்தார்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் ஸ்கிரிப்டட் (scripted) அவதூறுகளை அள்ளிவீசி நடிப்புத் திறனைக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் நேரலை கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி சிங்கிள் ஷூட் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும்தான் இருந்ததே தவிர,

மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்தது கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனைத் தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யாக நடந்து கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Udhayanidhi Stalin criticizes Tamil Nadu Chief Minister Vijay's 'short story'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.