இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

நகராட்சி நிர்வாக முறைகேடு: திமுக ஆட்சியில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற புதிய மனு!

நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பாக திமுக ஆட்சியில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற தவெக அரசு புதிய மனு ...

News image

சென்னை உயர்நீதிமன்றம் - ANI

Updated On :1 மணி நேரம் முன்பு

நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு வழக்கில் திமுக ஆட்சியில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற தவெக அரசு புதிய மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில், 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை அடுத்து, அதிமுக எம்.பி. இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படிருந்தன.

நீதிமன்ற அவமதிப்பு, மறு ஆய்வு மனு நிலுவையில் இருந்த சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் மீது இன்று வரை (ஜூன் 23 ஆம் தேதி வரை) மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, நேருவின் சகோதரர் உள்ளிட்டோர் தரப்பிலும், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஆட்சி மாறினாலும், முந்தைய அரசு எடுத்த நிலைபாட்டுக்கு மாறாக தற்போதைய அரசு எடுத்துள்ள நிலைபாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், பிரதான வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, நேரு உள்ளிட்டோர் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து வாதிடப்பட்டது.

இதையடுத்து, நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தற்போதைய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் நீதிபதிகள், ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். அதுவரை இதுசம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Summary

Municipal Administration fraud: New Petition Filed to Withdraw Petition Submitted During DMK Rule

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.