செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

பேரவையில் ஸ்டாலினின் செய்கையை செய்துகாட்டிய முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் செய்கையை முதல்வர் விஜய் செய்துகாட்டியது குறித்து...

News image
Updated On :4 மணி நேரங்கள் முன்பு

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் செய்கையை முதல்வர் விஜய் செய்துகாட்டினார்.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார்.

அப்போது, முதல்வர் விஜய் பேசுகையில், டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடித்தாகப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு குட்டிக்கதைக் கூறுவதற்கு முதல்வர் அனுமதி கேட்டார். பேரவைத் தலைவர் அனுமதி அளித்த நிலையில், முதல்வர் கதையைக் கூறினார்.

இதையடுத்து, முதல்வர் விஜய் உரையை முடிக்கும்போது, முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் பிரபலமான செய்கையை செய்தார். உடனே, அவையில் இருந்த உறுப்பினர்கள் சிரித்தனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவுற்றபோது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் செய்த செய்கை, இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Vijay reenacted former Chief Minister Stalin's actions in the Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.