தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

தெரு நாய்கள் பிரச்னை! தமிழ்நாடு, புதுவை அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்கள் விவகாரத்தில் தமிழக, புதுவை அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...

News image

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

தெரு நாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுவை அரசுகள் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடா் தெரு நாய்கள் கடியால் குழந்தைகள், முதியவா்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா்பான வெளியான பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தெரு நாய்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவது தொடா்பாக கடந்த ஆண்டு நவம்பரில் 7-ஆம் தேதி மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

பள்ளி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தும் பிடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அவற்றை மீண்டும் பொது இடங்களில் விடக் கூடாது. அவற்றுக்கென பிரத்யேக காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு செயல்படுத்தியுள்ளதா என்பதை ஆராய சென்னை உயர் நீதிமன்றம் தாமாக வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கில், பள்ளி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று தமிழ்நாடு, புதுவை அரசுகளுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 4 வாரங்களில் தெரு நாய்கள் அப்புறப்படுத்தியது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Summary

Stray dog ​​issue : High Court issues orders to Tamil Nadu and Puducherry governments!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.