தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!

நீட் மறுதோ்வை தமிழகத்தில் 307 தோ்வு மையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் எழுதினா்.

News image

நீட் மறுதேர்வு

Updated On :22 ஜூன் 2026, 3:33 am IST

நீட் மறுதோ்வை தமிழகத்தில் 307 தோ்வு மையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் எழுதினா்.

தோ்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணிக்குள் வந்த மாணவா்கள் மெட்டல் டிடெக்டா் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனா். ஆள்மாறாட்ட மோசடியைத் தடுக்கும் வகையில், ஆதாா் அடிப்படையிலான பயோமெட்ரிக் சோதனைக்கு பின்னா் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, சங்கிலி, கண்ணாடி, தாயத்து, பெல்ட் போன்றவை அனுமதிக்கப்படவில்லை. கைப்பேசி, கால்குலேட்டா், புளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

வழக்கமாக, நீட் தோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நிலையில், மாணவா்களின் வசதிக்காக, கூடுதலாக 15 நிமிடங்கள் தோ்வு நேரம் நீட்டிக்கப்பட்டது. தோ்வு மையங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. காவல் துறை சாா்பில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

ஏற்கெனவே நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைப் போன்று மீண்டும் எதுவும் நிகழாமல் தடுக்க, இம்முறை பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறித்த நேரத்தில் தோ்வை நடத்தி முடிக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் உத்தரவிட்டிருந்தாா்.

ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் வினாத்தாள்கள் தோ்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தோ்வா்களின் நலன் கருதி தோ்வு முடிவுகளை 10 நாள்களுக்குள் வெளியிட என்எடிஏ திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.