வரும் ஜூன் 26 ஆம் தேதி மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் அவைத் தலைவர் ஆ. அர்ஜுனராஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காலமாக தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மதிமுக எடுத்து வருவதாகத் தெரிகிறது. மதிமுக பொதுச் செயலர் வைகோ, முதன்மைச் செயலர் துரை வைகோ ஆகியோர் மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சி பொதுக்குழுவில் நிர்வாகிகளின் கருத்தை அறிந்து தலைமை முடிவு செய்யும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் ரீதியான விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு தலைமை முடிவெடுக்கும் என்று துரை வைவோ முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கவில்லை எனவும் மதிமுக பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்திய பிறகு, எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று வைகோவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனால் மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய்யின் தவெகவுடன் கூட்டணிசேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் வரும் ஜூன் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, எழும்பூர், தலைமை நிலையம் தாயகத்தில் அவைத்தலைவர் ஆ. அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Summary
MDMK Presidium Chairman A. Arjunaraj has announced that the party's high-level committee meeting will be held on June 26.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயுஎம்எல்!

ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

திமுக கூட்டணியில் சிபிஐ விலகல்! யார் இல்லாவிட்டாலும் கவலையில்லை: ஆர்.எஸ். பாரதி

இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: டி.கே.எஸ். இளங்கோவன்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


