/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை காலை(ஜூன் 20) 2,253 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...

News image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கோப்புப்படம்.

Updated On :11 மணி நேரங்கள் முன்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை காலை(ஜூன் 20) 2,253 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,253 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

சனிக்கிழமை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,397 கன அடியிலிருந்து வினாடிக்கு 2, 253 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 79.12 அடியிலிருந்து 79.21 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 41.17 டி.எம்.சியாக உள்ளது.

Summary

Regarding the increase in water inflow to Mettur Dam to 2,253 cubic feet per second on Saturday morning (June 20)...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.