நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு...

News image

பலத்த மழைக்கு வாய்ப்பு - ENS

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழகத்தில் திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வடக்கு கேரள பகுதிகளில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மேற்குத் தொடா்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் வட தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி கன்னியாகுமரி இடிமின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். திங்கள் கிழமை (ஜூன் 22) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திங்கள் முதல் புதன்கிழமை வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. அதே நேரத்தில் வெப்ப நிலை சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புகரின் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவாரூா் மாவட்டம் ஆவூரில் 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அரியலூா், கும்பகோணம் (தஞ்சை), (சிவகங்கை) சத்தரசங்கோட்டை ஆகிய இடங்களில் 110 மி.மீ., (தஞ்சாவூா்) மாத்தூா், (சிவகங்கை) இளையாத்தக்குடி 100 மி.மீ., (திண்டுக்கல்) அய்யலூா் 90 மி.மீ., பெரம்பலூா், (புதுக்கோட்டை) திருமயம், (கரூா்) பாலவிடுதி 80 மி.மீ., (மதுரை) தானியமங்கலம், (புதுக்கோட்டை) காரையூா், (சிவகங்கை) திருப்புவனம், (தஞ்சாவூா்) பாபநாசம் 70 மி.மீ., திருச்சி, (தஞ்சாவூா்) பூதலூா், தஞ்சாவூா், (திருச்சி) தூவாக்குடி, திருச்சி விமான நிலையம் 60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை (ஜூன் 24) வரை சூறாவளிக் காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chance of heavy rain in 6 districts today.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.