தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தனித்தீா்மானத்தை வரவேற்று அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. இதுதொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயக பூா்வ அணுகுமுறையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றிய அரசுக்கும், ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் பாராட்டுகள்.
டி.டி.வி.தினகரன் (அமமுக): மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதை செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு முதல்வா் ஜோசப் விஜய் தொடா்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீா்மானம் தமிழக மக்களின் எண்ணங்களையும், விவசாயிகளின் எண்ணங்களையும் பிரதிபலித்துள்ளது.
கமல்ஹாசன் (மநீம): தமிழகத்தின் நீா் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு, அனைவரும் ஓரணியாக நின்று ஆதரவு தெரிவித்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு பாராட்டுகள்.
க.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): சுமாா் 10 ஆண்டுகளாக நீடித்துவரும் மேக்கேதாட்டு பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வு காண முயற்சி செய்ய வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

