நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி...

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

தமிழக சட்டப்பேரவையில் கட்சியின் துதிபாடலும் கட்சித் தலைவர்களின் துதிபாடல்களும்தான் நடந்து கொண்டிருக்கிறது என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"பேரவையில் தனிக்கட்சியைப் பற்றிய துதி பாடலும் கட்சித் தலைவரைப் பற்றிய துதி பாடலும்தான் அதிகமாக இருக்கிறது. கட்சியினர் தங்கள் தலைவரை துதிபாடும் இடமல்ல சட்டப்பேரவை. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் என்று பேரவைத் தலைவர் அறிவுறுத்தியும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது கவலைக்குரியதாக உள்ளது. அப்படியென்றால் நாங்களும் கேப்டன் விஜயகாந்த் பற்றி எவ்வளவோ பேசலாம். அது சரியான எடுத்துக்காட்டு அல்ல. ஆரோக்கியமான விவாதங்கள் வேண்டும்.

பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும். மக்கள் வரிப் பணத்தில்தான் பேரவை நடக்கிறது. பேரவை நடவடிக்கைகளை மக்கள் பார்க்க வேண்டாமா? இதனை அவைத்தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.

சட்டம் - ஒழுங்கு, பாலியல் குற்றங்கள் குறித்து பதிலுரையில் முதல்வர் பற்றி பேசுவாரா என்று பார்க்கலாம். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. அலைகள் ஓய்வதில்லை என்பதுபோல் தமிழக மக்களின் பிரச்னைகள் ஓயவில்லை.

தண்ணீர், வேலைவாய்ப்பு என அனைத்திலும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக வேண்டும். மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்" என்று பேசினார்.

Summary

Premalatha vijayakanth press meet in TN Assembly campus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.