நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழ்நாடு

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை

ஆளுநர் உரை செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை.

6:40 pm, 18 ஜூன் 2026

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் இன்று(ஜூன் 19) விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

6:11 pm, 18 ஜூன் 2026

சென்னையில் பலத்த காற்றுடன் மழை! வானில் வட்டமடித்த விமானங்கள்

சென்னையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு திடீரென சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

6:11 pm, 18 ஜூன் 2026

எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?

இ20 பெட்ரோல் எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட காரின் டேங்கு மூடிப் பகுதியை எறும்புகள் சூழ்ந்திருப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகியிருந்த நிலையில், பாரத் பெட்ரோலியம் இது குறித்து உண்மையை வெளியிட்டுள்ளது

6:10 pm, 18 ஜூன் 2026

டெலிகிராம் குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு

டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக, இந்தியாவில் விதிக்கப்பட்ட தற்காலிக தடையை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

1:20 pm, 18 ஜூன் 2026

ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை! பிரேமலதா விஜயகாந்த்

இன்றைய ஆளுநரின் உரை ஆளுங்கட்சி தரப்புக்கு ஆதரவாக இருந்தது. தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை நாம் வரவேற்போம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை - பிரேமலதா விஜயகாந்த்

1:20 pm, 18 ஜூன் 2026

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவுக்கு திட்டங்கள் இல்லை! எடப்பாடி கே பழனிசாமி

ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவுக்கு புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே பழனிசாமி வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.

12:43 pm, 18 ஜூன் 2026

என் மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்! அவர் அதிமுக அடிப்படை உறுப்பினர் மட்டுமே, எந்த பொறுப்பிலும் இல்லை - எடப்பாடி பழனிசாமி

12:43 pm, 18 ஜூன் 2026

ஆளுநர் வாசித்த உரையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது!

ஆளுநர் வாசித்த உரையில் மாற்றம் எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

12:43 pm, 18 ஜூன் 2026

3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! ஜூன் 23ல் முதல்வர் விஜய் பதிலளிக்கிறார்...

12:43 pm, 18 ஜூன் 2026

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே அரசின் முதல் லட்சியம்!

12:43 pm, 18 ஜூன் 2026

வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டங்கள்!

12:43 pm, 18 ஜூன் 2026

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணம் போதைப் பொருள் புழக்கம்தான்!

தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு முதற் காரணம் மாநிலத்தில் பரவலாகக் கிடைக்கும் போதைப் பொருள் புழக்கம்தான் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

10:45 am, 18 ஜூன் 2026

36 நிமிட ஆளுநர் உரை

தமிழ்நாடு ஆளுநரின் 36 நிமிட உரை, திருக்குறளுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசித்து வருகிறார்.

10:39 am, 18 ஜூன் 2026

கடன் இருமடங்கு

தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை குறிப்பிட்டு, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடனானது இரு மடங்கு அதிகரித்ததையும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

10:39 am, 18 ஜூன் 2026

மேக்கேதாட்டு அணை

கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

10:39 am, 18 ஜூன் 2026

இருமொழிக் கொள்கை

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடரும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் ஆளுநர் வாசித்து வருகிறார்.

10:38 am, 18 ஜூன் 2026

பாரபட்சம்

மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை எவ்வித மாற்றமும் திருத்தமும் இன்றி ஆளுநர் ஆர்லேகர் வாசித்து வருகிறார்.

10:26 am, 18 ஜூன் 2026

தவெகவுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசியலில் வரலாற்று புரட்சி செய்யப்பட்டுள்ளது. கட்சித் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது என்று ஆளுநர் பாராட்டு.

10:25 am, 18 ஜூன் 2026

ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்!

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் உரையை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றி வருகிறார்.

10:06 am, 18 ஜூன் 2026

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

10:06 am, 18 ஜூன் 2026

தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கியது

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

9:57 am, 18 ஜூன் 2026

ஆளுநர் வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.வி. ஆா்லேகரை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன், அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையனும் இருந்தார்.

தமிழ்நாடு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

9:53 am, 18 ஜூன் 2026

யாரையும் விமர்சிக்க வேண்டாம்! ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன்!

9:47 am, 18 ஜூன் 2026

முதல்வர் வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்துக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வருகை தந்துள்ளார்.

9:47 am, 18 ஜூன் 2026

வாயை திறங்க சிஎம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ’வாயை திறங்க சிஎம்’ என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர்.

9:47 am, 18 ஜூன் 2026

இபிஎஸ்ஸுக்கு 5-வது இருக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வரிசையில் 5-வது இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

9:47 am, 18 ஜூன் 2026

விசிக கேள்வி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பாக, முதலில் வந்தே மாதரம் இசைக்கப்படுமா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுமா? என்று விசிக எம்பி ரவிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

9:47 am, 18 ஜூன் 2026

சா்ச்சை தொடருமா...?

சட்டப்பேரவைத் தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பதும், முடிவில் தேசிய கீதம் இசைப்பதும் பேரவையில் மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில், முதலில் தேசிய கீதம் இசைக்கவில்லை என்று கூறி, முந்தைய திமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநா் ஆா்.என். ரவி வெளிநடப்பு செய்து வந்தாா். 

9:40 am, 18 ஜூன் 2026

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் உரையுடன் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.

இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.