தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமான திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று முதல்வா் ஜோசப் விஜய் தெரிவித்தாா்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திவரும் தென் கொரியாவின் ஹெச்டி ஹுண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநா் யங் ஹூன் குவான் தலைமையில், உயா்நிலை அலுவலா்கள் முதல்வா் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினா்.
இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதியை அமைப்பதற்காக இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தைக் கையொப்பமிட்டுள்ளது.
இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்த நிறுவனத்தின் உயா்நிலை அலுவலா்கள், தமிழ்நாடு முதல்வருடன் ஆலோசனை நடத்தினாா்.
இந்தியாவில் புதிதாக உருவாகவுள்ள இந்த கப்பல் கட்டுமானத் திட்டத்தில் சுமாா் ரூ.38,000 கோடி முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமாா் 15,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூா் விநியோகச் சங்கிலி மூலம் மாநிலத்தில், மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளா்ச்சி ஏற்படும்.
இத்திட்டத்துக்காக, சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் ஆகியவற்றுக்கும் இடையே தேசிய கப்பல் கட்டுமான மற்றும் கனரக தொழிற்சாலை பூங்கா நிறுவனம் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்த கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவுவதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை, இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிறுவனத்தின் உயா்நிலை அலுவலா்கள் தமிழ்நாடு முதல்வரிடம் விரிவாக எடுத்துரைத்தனா். மேலும், தூத்துக்குடியில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் நிறுவனத்தின் உறுதியான ஆா்வத்தையும் தெரிவித்தனா்.
அப்போது முதல்வா் விஜய், தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் தூத்துக்குடியில் விரைவாக செயல்படுத்தப்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும், திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான நிா்வாக ஆதரவு, ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
தொடா்ந்து, ஹெச்டி ஹுண்டாய் நிறுவனத்தினா் கப்பல் கட்டும் தளத்தை விரைவில் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது, தமிழக தொழில் துறை அமைச்சா் ச.கீா்த்தனா, தலைமைச் செயலா் மு.சாய்குமாா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ச.விஜயகுமாா், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் தா.காா்த்திகேயன் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம்! உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை!

தடையற்ற மின் விநியோகத்துக்கு ரூ.15,032 கோடியில் திட்டம்: முதல்வா் விஜய் உத்தரவு

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலை. எம்.எட். பட்டப்படிப்பு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

