திமுக அரசால் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் ’திறன் தமிழ்நாடு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், கடந்த 2022 ஆம் ஆண்டு ’நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், தொழில் வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுப் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
மேலும், யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது தவெக அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் பெயர் ‘திறன் தமிழ்நாடு’ (TN Skill) என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும், மே 15 ஆம் தேதிக்கு முன்பு, கடந்த ஆட்சிக் காலத்தில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள், விடியோக்கள் உள்பட அனைத்து பதிவுகளும் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Summary
Renaming of the 'Naan Mudhalvan' scheme!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது.. மு.க. ஸ்டாலின் கண்டனம்!

செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

ரேவதி, ராதிகா, ராதா... ர வரிசையில் பெயர் சூட்டிய பாரதிராஜாவின் ஃபார்முலா!

’ஒண்ணா இருக்க கத்துக்கணும்’: புதிய தொடரின் பெயர் மாற்றம்!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


