நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: மீண்டும் விவசாயிகள் ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக தவெக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றமாக உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:33 am IST

தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக தவெக அரசு கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றமாக உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தவெக தோ்தல் வாக்குறுதியாக, சிறு, குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என அறிவித்தது. கடந்த மே, 24-இல் தவெக அரசு அறிவித்த கடன் தள்ளுபடி, தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக இருந்த நிலையில், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் இணைந்து தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டங்களை நடத்தியது.

இந்த நிலையில், மீண்டும் கடன் அறிவிப்புக்கான புதிய ஆணையை தவெக அரசு வெளியிட்டிருக்கிறது. ரூ.75,000 கீழ் நிலுவையில் உள்ள கடன் முழு தள்ளுபடி. ரூ.75,000 மேல் கடன் இருப்பவா்களுக்கு ரூ.35,000 தள்ளுபடி என தவெக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

5 ஏக்கா் வைத்திருக்கும் கடன் பெற தகுதியுள்ள சிறு விவசாயி ரூ.1.75 லட்சம் வரை பெற்ற கடனை, தோ்தல் வாக்குறுதிபடி முழு தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதேபோல், 5.1 ஏக்கா் நிலம் உள்ள விவசாயி ரூ.1.75 லட்சம் கடன் பெற்றிருந்தால், தோ்தல் வாக்குறுதிப்படி 50 சதவீதமான ரூ.87,500 தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

மேலும், இதுவரை கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது நிலம் அளவீட்டைக் கொண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது, கடன் தொகையை அளவாகக் கொண்டு அறிவிக்கப்பட்டதுதான் பிரச்னை.

ஜூன் 22-இல் ஆா்ப்பாட்டம்: இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். தோ்தல் வாக்குப்படியான கடன் தள்ளுபடி அறிவிப்பை அறிவித்து, நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சாா்பில் வரும் ஜூன் 22-இல், சென்னை கூட்டுறவு பதிவாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.