மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

100 நாள்களை நிறைவு செய்த அழகே அழகு தொடர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகே அழகு தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது குறித்து...

News image

நக்‌ஷத்ரா நாகேஷ் / அன்ஷிதா - இன்ஸ்டாகிராம்

Updated On :16 ஜூன் 2026, 5:21 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகே அழகு தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது.

நாடகத்தனமாக இல்லாமல், நிஜ வாழ்க்கை பாத்திரங்களை அடிப்படியாக வைத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருவதால், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

வசனங்களும் காட்சி அமைப்பும் அழகாக இருக்க வேண்டும் என இழுவையாக இல்லாமல், ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை எதார்த்தமாக பதிவு செய்து வருவதால், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அழகே அழகு தொடர்

அழகே அழகு தொடர் - இன்ஸ்டாகிராம்

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

செல்லம்மா தொடரில் நடித்த அன்ஷிதா, தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நக்‌ஷத்ரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அன்ஷிதாவுக்கு ஜோடியாக குணா குமரன், நக்‌ஷத்திராவுக்கு ஜோடியாக பிரேம் ஜேக்கப் நடிக்கின்றனர். இவர் நீ நான் காதல் தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.

இவர்கள் மட்டுமின்றி குறிஞ்சி நாதன், சுனிதா, மதன் குமார் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் இத்தொடருக்கு வலு சேர்த்துள்ளது.

பழமைவாதம் நிறைந்த வீட்டில் அனைத்தையும் சகித்துக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் மூத்த மருமகள், அதே வீட்டில் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இளைய மருமகள் என இருவரை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மருமகள்கள், மாமனார், மாமியார், கணவன்மார்கள் என இவர்களுக்கிடையே நடக்கும் பிரச்னைகளும் முரண்களுமே இத்தொடரின் திரைக்கதை வடிவமாக உள்ளது.

இந்தத் தொடர் தற்போது 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக குக் வித் கோமாளியில் அழகே அழகு தொடரின் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

Summary

Azhagae Azhagu Serial complete 100 days in vijay tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.