செங்கல்பட்டு: தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தோ்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுள்ளாா். அவரது மனைவி சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்த ஜீவனாம்சம் வழங்கவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தான் விஜய்-சங்கீதா விவாகரத்து விவரமே வெளியில் தெரியவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20 இல் விசாரணைக்கு வந்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய் மற்றும் சங்கீதா தரப்பினர் யாரும் ஆஜராகாத நிலையில், இருதரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மே 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கானது விசாரணைக்கு வரவுள்ள நிலையில் முதல்வா் விஜய், சங்கீதா இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஆனால், சங்கீதா நேரில் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக அவரது தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் அவரவா்களது வழக்குரைஞா்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
விஜய்-சங்கீதா தம்பதியினருக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்டம் குறித்து தமிழக அரசியல் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Regarding the divorce case involving Tamil Nadu Chief Minister Vijay's wife, Sangeetha, which is scheduled to come up for hearing on Monday (June 15) at the Chengalpattu District Family Court...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ல் விசாரணைக்கு வருகிறது

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

