தமிழககத்தில் நீலகிரி, கன்னியாகுமரி , ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் , தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சத வெப்பநிலை ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை சற்று அதிகமாக இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூா் பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி), சின்னக்கல்லாறு (கோவை)-50 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), அடையாமடை (கன்னியாகுமரி), சோலையாறு (கோவை), குண்டாறு அணை (தென்காசி)-40 மி.மீ., பாலமோா், சிற்றாறு- 1, பெருஞ்சாணி அணை, குளச்சல், புத்தன் அணை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), உபாசி, வால்பாறை (கோவை), சின்கோனா (கோவை)-30 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

