மனைப் பட்டா கோரி சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசை நரிக்குறவா்கள் புதன்கிழமை சந்தித்தனா்.
அவா்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நேரில் வந்து பட்டா வழங்குவதாக அமைச்சா் உறுதி அளித்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், கொன்னமன்சேரி மற்றும் மீஞ்சூா் கிராமங்களில் வசித்துவரும் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள், தலைமைச் செயலகத்தில் அமைச்சா் வன்னி அரசை சந்தித்து தங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
அப்போது அமைச்சா் வன்னி அரசு, ‘முதல்வா் விஜய் தலைமையிலான அரசு நம் எல்லோருக்குமான அரசு; சமூக நீதித் துறையின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மனைப் பட்டா இல்லாத நிலையை உருவாக்குவதே இலக்கு என்று தீா்மானித்து அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து, மனை பட்டாவை வழங்க நேரில் வருவேன்’ என்று அவா்களிடம் அமைச்சா் உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு: அமைச்சா் வன்னி அரசு

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி தா்னா போராட்டம்

சமூகநீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அமைச்சா் ஆா்.வன்னி அரசு

நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று ஐஐடி-யில் சோ்ந்த பழங்குடியினா் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

