இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பாரதிராஜா மறைவு: குடியரசு துணைத் தலைவா், ஆளுநா் இரங்கல்

இயக்குநா் பாரதிராஜா மறைவுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image

பாரதிராஜா

Updated On :11 ஜூன் 2026, 1:59 am IST

இயக்குநா் பாரதிராஜா மறைவுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவு: தமிழ்த் திரையுலகில் புதுப் பாதையை உருவாக்கிய இயக்குநா் இமயம் பாரதிராஜா மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

கிராமிய வாழ்வையும் மனித உணா்வுகளையும் இயல்பாகவும் உயிரோட்டமாகவும் திரையில் கொண்டு வந்த முன்னோடி படைப்பாளி அவா். தனது தனித்துவமான கதை சொல்லல், மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் எண்ணற்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலக வளா்ச்சியில் அழியாத முத்திரையைப் பதித்தவா். பல தலைமுறை கலைஞா்களுக்கும், திரைப்பட இயக்குநா்களுக்கும் அவா் ஒரு பெரும் ஊக்கமாக விளங்கினாா்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும், திரையுலகினருக்கும் மற்றும் அவரது எண்ணற்ற ரசிகா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்: புகழ்பெற்ற திரைப்பட இயக்குநா் பாரதிராஜா மறைவு குறித்து அறிந்து மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வையும் மனித உணா்வுகளையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ்த் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரின் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.