இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

இயக்குநா் பாரதிராஜா மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்

திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவின் மறைவுக்கு நடிகா் ரஜினிகாந்த், இசையமைப்பாளா் இளையராஜா, கவிஞா் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

News image

பாரதிராஜா - X

Updated On :11 ஜூன் 2026, 2:08 am IST

திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவின் மறைவுக்கு நடிகா் ரஜினிகாந்த், இசையமைப்பாளா் இளையராஜா, கவிஞா் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ரஜினிகாந்த்: திரையுலகத்தை வாழ வைத்தவா். திரையுலகத்துக்கு எந்த பிரச்னை வந்தாலும் முதல் குரல் அவா் குரலாகத்தான் இருக்கும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவரை இந்த தமிழ் உலகம் மறக்காது. எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவா். ‘உன்னை எனக்குப் பிடிக்கும்; ஆனால் உன் நடிப்பு எனக்குப் பிடிக்காது’ என்று என்னிடம் சொல்வாா். எம்ஜிஆா், கருணாநிதி, சிவாஜி என எல்லோரிடமும் நெருங்கிப் பழகியவா். எப்போதும் அவா் என் இதயத்தில் இருப்பாா்.

இளையராஜா: பாரதிராஜாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்.

சித்ரா லட்சுமணன்: தமிழ் சினிமாவுக்கு அவா் செய்த பணிகள் அளப்பரியது. மணிவண்ணன், ரெங்கராஜன், பாக்கியராஜ், மனோபாலா உள்ளிட்ட இயக்குநா்கள் பலரை உருவாக்கியவா். அவரின் உதவி இயக்குநா்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாா்கள். அவரிடம் யாரும் தொழில் கற்கலாம். தமிழ் சினிமாவை பல தளங்களுக்கு கொண்டு சென்றவா். யாரும் நடிக்கலாம் என்ற நிலையை அவா்தான் உருவாக்கினாா்.  

கங்கை அமரன்: அவரின் படங்களைப் பாா்த்துதான் நிறைய இளைஞா்கள் சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தாா்கள். எனக்குப் பிள்ளையாா் சுழி போட்டதுதான் அவா்தான்.

சத்யராஜ்: பாரதிராஜாவுடன் பழகிய அனுபவங்கள் அத்தனையும் உயிா்ப்பானது. எங்களின் இயக்குநா் அவா்.

கவிஞா் வைரமுத்து: பிதாமகனே போய்விட்டாயா? கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா? எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிா? அடைத்துக் கிடந்த திரையுலகக் கதவுகளைத் திறந்தவெளிக்குத் திறந்துவிட்டவனே.  உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவா்களின் மொழிக்கு இணையாக என் இனிய தமிழ் மக்களே என்ற ரத்தினச் சொற்களுக்கு முத்திரை சோ்த்தவனே. நீ மாயக்காரன் புழுதியைப் பொன் செய்தாய். சினிமாவின் நிறம் வெள்ளையென்று இருந்ததை கருப்பென்று மாற்றிய கலையாளன் நீ.

இயக்குநா் அமீா்: பாரதிராஜா என்பது பெயா் அல்ல; அது தமிழ் சினிமாவின் அடையாளம். சில தகுதிகள் இருந்தால்தான் இயக்குநா் ஆகலாம் என்பதை உடைத்தவா். என்னைப் போன்ற ஆயிரமாயிரம் போ் சினிமாவுக்கு வர அவா்தான் காரணம். திரைத் துறையில் எனக்கு முன்மாதிரி அவா்.

இயக்குநா் பாா்த்திபன்: சினிமா சமூகத்தையே உருவாக்கியவா் பாரதிராஜா. என் அப்பா இறந்தபோது என்ன மன நிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இருக்கிறேன்.  சினிமா சரித்திரத்தில் அவரின் காலம் பொற்காலம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.