இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மின்துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் நிர்மல் குமார்

மின்துறையில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்து அமைச்சரின் அறிவிப்பு.

News image

நிர்மல் குமார் - படம்: எக்ஸ்

Updated On :8 ஜூன் 2026, 5:48 pm IST

மின்சார வாரியத்தில் இந்த ஆண்டுக்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல்கட்டமாக இந்த ஆண்டிற்குள் மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியாளர்கள் அரசுப் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ”​மின்சார வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உதவிப் பொறியாளர்களாகப் பணிபுரிந்து, பதவி உயர்வு கிடைக்காமல் சட்டப் போராட்டம் நடத்தி வந்த 300 ஊழியர்களுக்கு, உடனடியாக செயற்பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில், ஊழியர்களின் நீண்டகாலப் கோரிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள், முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மற்ற பிரிவுகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” என்றார்.

​​”மின்சார வாரியத்தில் தற்போது சுமார் 70,000 பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், முதல்கட்டமாக 15,000 பணியாளர்களைப் புதியதாக வேலைக்கு எடுப்பதற்கான வரைவு அறிக்கை (Proposal) தயாராகி வருகிறது.

முதல்வரின் ஒப்புதலுக்குப் பின், இந்த ஆண்டிலேயே இந்தப் பணியிடங்கள் அனைத்தும், தற்காலிகப் பணியிடங்களாக இல்லாமல், முழுமையான அரசுப் பணியிடங்களாக நிரப்பப்படும். மேலும், கேங்மேன் (Gangman) பணியிடங்கள் தொடர்பான நிலுவை விவகாரங்களில் இன்னும் சில வாரங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும்” எனக் கூறினார்.

Summary

Electricity Minister Nirmal Kumar has announced that 15,000 new vacancies in the Electricity Board will be filled within this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.