இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு!

பனையூர் பாபு திமுகவில் இணைந்தது குறித்து...

News image

திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு! - படம்: விடியோ கிளிப்

Updated On :7 ஜூன் 2026, 12:57 pm IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு இன்று(ஜூன் 7) திமுகவில் இணைந்தார்.

அண்மையில், விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில், ஆதரவாளர்கள் 1200 பேருடன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து அந்தக் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலரும், செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

”விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்துக்குதான் செல்ல வேண்டும், சட்டப்பேரவைக்கு வரக் கூடாது. பெரியார் ஈவெராவும், அம்பேத்கரும் பேசிய அரசியலையும் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர் விஜய் என்று பேசிய தொல். திருமாவளவன், தற்போது தவெகவுடன் கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாக இருக்கிறது.

விசிக பயணித்துக்கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல் அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் தலைமையின் கீழ் இனியும் தன்னால் பயணிக்க இயலாது. இது எனது மனசாட்சியை உணர்த்துகிறது.

எனவே, விசிகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என்று தெரிவித்து விசிகவில் இருந்து விலகிய நிலையில், இன்று திமுகவில் இணைந்தார்.

Summary

Former MLA Panaiyur Babu, who left the Viduthalai Chiruthaigal Katchi (VCK), joined the DMK today (June 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.