பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்

தமிழ்நாட்டில் திமுக என்ற கூட்டணி இப்போது இல்லை என பெ. சண்முகம் விமர்சித்துள்ளது குறித்து...

News image

செய்தியாளர் சந்திப்பில் பெ. சண்முகம் - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 4:07 pm IST

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை என மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது:

''தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு என்பது சுயேட்சையாக எடுத்த முடிவு என்பதை முன்பே தெளிவாகக் கூறிவிட்டோம். இன்னொரு கட்சியிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளில், மதச்சார்பற்ற பிரச்னைகள், ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் திமுகவுடன் இணைந்து போராடுவோம் எனக் கூறியுள்ளோம். அதே நிலைப்பாடுதான் இப்போதும் உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, 3 மாதங்களுக்குக் கூட தாங்காது என சொல்லக் கூடாது. மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் கூறினாலும் அது தவறு. எல்லா வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது.

இங்கு எதுவும் புதிதாக நடந்துவிடவில்லை. அதிமுகவின் அழிவுக்கு பாஜகதான் காரணம். பாஜகவின் மதவெறி நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் உடன் இணைந்து உருவாக்கியது இந்தியா கூட்டணி. எங்கள் அகில இந்திய தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள்'' என பெ. சண்முகம் குறிப்பிட்டார்.

Summary

DMK alliance no longer exists CPIM Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.