முதல்வர் விஜய்யுடனான சந்திப்பின்போது, டாஸ்மாக் கடைகளை ஊர்களின் ஒதுக்குப்புறத்தில் சுடுகாடுகளின் அருகே வைக்கலாம் என சிறு யோசனை கூறியதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விடியோ வெளியிட்டுள்ள பார்த்திபன், "எம்ஜிஆர் காலத்திலிருந்தே டாஸ்மாக்கை ஒழிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், எந்த ஆட்சியாக இருந்தாலும் இதனை ஒழிக்க முடியவில்லை. அப்படியெனில், இது ஒரு தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது.
தினசரி உழைக்கும் வர்க்கத்தினருக்கு வழங்கப்படும் கூலி, மகிழ்வாக இல்லாததால், மாலையில் வீடு திரும்பும்போது அவர்களுக்குள் ஒரு வெறுமை வந்து விடுகிறது. இதனால், உடல் வலிக்கு தற்காலிகத் தீர்வாக டாஸ்மாக் நோக்கிச் செல்கின்றனர்.
டாஸ்மாக் விவகாரத்தில் அணுகவேண்டிய முறை வேறுவிதமாக இருக்க வேண்டும்.
டாஸ்மாக்கை மூடினால், கள்ளச்சாராய வியாபாரம் பெருகும் அபாயமும், அரசுக்குக் கிடைக்கக் கூடிய வருமானம் போன்ற பிரச்னைகளும் உள்ளன.
டாஸ்மாக்கை மையமாக வைத்து ஆண்டாள் என்ற படம் எடுக்கவிருந்தேன். ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் சுடுகாடு அல்லது மின்தகனம் இருக்கும் பகுதிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகளை நிறுவினால், மக்களுக்கு மனரீதியான ஒருவகை எண்ணங்கள் வரும். அதாவது, கடைசியாக செல்லும் இடத்துக்கு (சுடுகாடு) இப்போதே வருகிறோமோ என்ற எண்ணமோ பயமோ வரலாம்.
சிகரெட், மது பாட்டில்களில் 'உயிரைக் கொல்லும்' என்ற வாசகம் இருப்பதுபோல், இந்த நடவடிக்கையும்ம் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.
இதனால், வருமானமும் கெடாது; ஊருக்குள் நிகழும் தகராறுகளும் குறையும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லையே. இது ஒரு சிறு யோசனையே" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Actor Parthiban suggests locating TASMAC shops on the outskirts of towns, near cremation grounds
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் வருவாயில் மாதந்தோறும் ரூ.102 கோடி முறைகேடு! விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு

அஜித்குமார் தாயார் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

டாஸ்மாக் கடை மூடப்பட்டது தெரியாமல் மதுவாங்கக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

