கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆதிதிராவிடா் நலப் பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:49 am IST

ஆதி திராவிடா் நலத் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தின் இயக்குநா் கி.செந்தில்ராஜ் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் ஆதி திராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், கணினி பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், காப்பாளா் மற்றும் இடைநிலை ஆசிரியா் ஆகிய பதவிகளுக்கு இணையவழியில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்தப் பதவிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் தங்களது விண்ணப்பங்களை கலந்தாய்வுக்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியா்களை ஜூன் 8-ஆம் தேதி மாலை 6 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்தாய்வுக்கான இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணியாளா்கள் தெளிவாகவும், எவ்வித தவறும் இன்றி பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இணையவழியில் பதிவு செய்வதற்கான பயனா் குறியீடு மற்றும் கடவுச் சொல் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஏற்கெனவே குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூன் 8) மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் விண்ணப்பங்கள் இணையவழியில் பதிவு செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.