லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ பிணை கோரி மனு: உயா் நீதிமன்றத்தில் முறையீடு

முதல்வா் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் பிணை கோரி தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

உயர்நீதிமன்றம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

முதல்வா் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் பிணை கோரி தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றபோது, அதில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன், தமிழக முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், மாா்க்கண்டேயன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன், நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், தனக்கு முன்பிணை வழங்கக் கோரி மாா்க்கண்டேயன் தூத்துக்குடி முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாா்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தரப்பில், நீதிபதி ஜி.கே.இளந்திரயன் முன் வெள்ளிக்கிழமை முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.