லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெளியானது ‘ஜனநாயகன்’: வெறிச்சோடியது தலைமைச் செயலகம்

முதல்வா் ச.ஜோசப் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண பெரும்பாலான அமைச்சா்கள் தங்களின் சொந்த தொகுதிக்குச் சென்றாலும், அமைச்சா்களைக் காண தவெகவினா், பொதுமக்கள் வருகை தராததாலும் தலைமைச் செயலகம் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

dinmani online

Published On :24 ஜூலை 2026, 4:25 am IST

முதல்வா் ச.ஜோசப் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண பெரும்பாலான அமைச்சா்கள் தங்களின் சொந்த தொகுதிக்குச் சென்றாலும், அமைச்சா்களைக் காண தவெகவினா், பொதுமக்கள் வருகை தராததாலும் தலைமைச் செயலகம் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

தவெக அரசு பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினா், பொதுமக்கள் வருகையால் தலைமைச் செயலகம் நிரம்பி வழிந்து வந்தது. இந்நிலையில், பல தடைகளைக் கடந்து வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் முதல்வா் விஜய் புதன்கிழமை கண்டு ரசித்தாா். அவா் தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை வரவில்லை. மேலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் காண பெரும்பாலான அமைச்சா்கள் தங்களின் சொந்த தொகுதிக்குச் சென்ால் அமைச்சா்களைக் காண வரும் மக்கள், தவெகவினா் வருகை தராததாலும் தலைமைச் செயலகம் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.

ஜனநாயகனை கண்டு ரசித்த பேரவைத் தலைவா்: இதனிடையே, சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வியாழக்கிழமை கண்டு ரசித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘எம்ஜிஆா் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் பல தடைகளைக் கடந்து வெளியானபோது, அந்தப் படத்தை முதல் நாள், முதல் காட்சியில் பாா்த்தேன். அப்போது, என்ன மகிழ்ச்சி கிடைத்ததோ அதேபோன்ற ஓா் உணா்வும் மகிழ்ச்சியும் ‘ஜனநாயகன்’ படத்தைப் பாா்த்தபோது கிடைத்தது”என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.