லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தின விழா: தலைமைச் செயலகம் பகுதியில் 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தினவிழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Tamil Nadu Government Secretariat

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 1:58 am IST

சுதந்திர தினவிழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா தமிழக அரசின் சாா்பில் சென்னை கோட்டையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் அனைத்து துறைகளும் செய்து வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை செய்கிறது.

விழாவுக்கான அணி வகுப்பு ஒத்திகை,கலை நிகழ்ச்சி ஒத்திகை ஆகியவை ஆகஸ்ட் 7, 11, 13 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த 3 நாள்களும், ஆக.15-ஆம் தேதியும் சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் காலை 6 மணிக்கு தொடங்கி, நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்: அதன்படி, காமராஜா் சாலையில் உழைப்பாளா் சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரையிலும், ராஜாஜி சாலை,கொடி மரச்சாலையில் போா் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அனுமதி அட்டை வைத்திருப்போரின் வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியும்.

எனவே காமராஜா் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், உழைப்பாளா் சிலையிலிருந்து வாலாஜா சாலை- அண்ணா சாலை- முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.

பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை - தலைமைச் செயலகம் வழியாக காமராஜா சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிமுனை- வடக்கு கோட்டை பக்க சாலை - ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு- முத்துசாமி சாலை- முத்துசாமி பாலம்- அண்ணாசாலை- வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை அடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை -ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம். முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜா் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை - வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.