லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்.. இது விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியது பற்றி...

cm vijay

முதல்வர் விஜய்

Published On :10 ஜூலை 2026, 3:01 pm IST

லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது என்று சொன்னவர்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள் என முதல்வர் விஜய் கரூர் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

லஞ்சம், ஊழல் எல்லாம் ஒழிக்க முடியாது, அதெல்லாம் ரத்தத்தில் ஊறிப்போனது என சொன்னவர்கள் ஒவ்வொரு அரசு அலுவலர்களுக்குச் சென்று பாருங்கள்.. ஒரு பைசா லஞ்சம் இல்லை. ஒரு பைச ஊழல் இல்லை. வேலையெல்லாம் வேகமாக நடைபெறுகிறது.

அரசு அலுவலகத்தில் ஒரு பெரியவர் சொல்கிறார். தம்பி வேலையெல்லாம் நடக்கின்றது. ஆனால், அதையும் தாண்டி எங்களுக்கு மரியாதைக் கொடுக்கிறார்கள். அமர வைத்துப் பேசுகிறார்கள். இதற்கு முன்பு இதெல்லாம் நடந்ததேயில்லை.

அவன போய் பாரு, இவன போய் பாரு என்று அலைக்கழிப்பார்கள். இப்போது லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை வேலையெல்லாம் உடனே நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் பெருமூச்சு விடுகிறார்கள்.

அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு மேல் என்ன வேணும்? ஏன் இதையெல்லாம் செய்ய முடியாதா, மனம் இருந்தால் இதை எப்போதுதே செய்திருக்கலாம். எல்லாம் நடக்கும் என்று பேசினார்.

அதோடு, எல்என்டி நிறுவனத்துடன் 18 ஆயிரம் கோடிக்கு மூன்று திட்டங்கள் போடப்பட்டுள்ளது. அதன்மூலம், கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறுவை சாகுபடி விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்.

உங்களிடம் யாரெனும் லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். இது உங்கள் விஜயோடு ஆட்சி என தைரியமாகச் சொல்லுங்கள் என்று அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.