திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

அவைக் குறிப்பில் நீக்கியவற்றை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை: ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை

அவைக் குறிப்பில் நீக்கியவை குறித்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியது பற்றி...

JCD Prabhakar

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - TN Assembly

Published On :22 ஆகஸ்ட் 2026, 12:05 pm IST

தமிழக சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிய கருத்துகளை எந்த வடிவில் வெளியிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் குறித்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரன் பேசியதாவது, "அவைக் குறிப்பில் இருந்து நீக்கியவற்றை எந்த வகையில் பயன்படுத்தினாலும், அது அவையின் மாண்பைக் குறைப்பதாகவும், நடத்தை விதிகளை மீறுவதாகவும் இருக்கும்.

இது தொடர்பாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கடிதம் வழங்கியுள்ளனர். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. மேலும், சட்டப்பேரவையின் அலுவல்கள் நேரலையிலும் ஒளிபரப்பப்படுகிறது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையோ அவையின் மாண்பைக் குறைக்கும் கருத்துகளையோ கூறினால், அவற்றை உடனடியாக அவைக் குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நீக்கி விடுகிறார்.

இருப்பினும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோ நீக்கப்பட வேண்டிய கருத்துகளோ அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டாலும், அவை நேரலையில் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், இதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டப்பேரவையில் உதயநிதி வலியுறுத்தினார்.

Summary

Action will be taken if expunged assembly proceedings are released as Reels, says Speaker JCD Prabhakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.