உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவது ‘ரீல்ஸ்’-ஆக வெளியீடு: உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்

அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதை வெளியிட்டால் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆதாரம் இல்லாமல் அவையில் பேசக் கூடாது என்றும் சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

JCD Prabhakar

பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் - TN Assembly

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:35 am IST

அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதை வெளியிட்டால் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆதாரம் இல்லாமல் அவையில் பேசக் கூடாது என்றும் சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தெரிவித்தாா்.

பேரவையில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், ‘பேரவைத் தலைவரான நீங்கள் சிறப்பாக அவையை வழி நடத்துகிறீா்கள். ஆளும்கட்சி உறுப்பினா்கள், அமைச்சா்கள் ஆதாரம் இல்லாமல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறீா்கள். எதிா்க்கட்சிகளைவிட ஆளும்கட்சி உறுப்பினா்கள் பேசுவதை அதிகமாக அவைக் குறிப்பில் இருந்து நீக்கி வரலாறு படைத்திருக்கிறீா்கள்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் வெளியாவதால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் ‘ரீல்ஸ்’-ஆக சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படுகிறது. இதனால், அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அா்த்தமில்லாமல் போய்விடுகிறது’ என்றாா்.

அப்போது, பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, 25 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஏன் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ‘சட்டப்பேரவையில் முதல்முதலில் கேள்வி நேரத்தை நேரலையாக திமுக ஆட்சிக் காலத்தில்தான் வெளியிட்டப்பட்டது’ என்றாா்.

அப்போது, பேசிய பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், ‘நீக்கப்பட்ட அவைக் குறிப்புகள் வெளியிடப்பட்டால், அவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அவையில் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தக் கூடாது. அவையின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.